Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 1 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது வரை தீ கட்டுக்காட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும், மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, மாநகரசபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் மூலம் தீயணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், தீயணைப்பு இயந்திரத்துக்கான நீரை பவுசர்கள் மூலம் வெளியிடத்திலிருந்து கொண்டு வந்து நிறப்பப்படுவதால் தீயைக் கட்டுப்படுத்துவது சிரமமான பணியாக உள்ளதாக, தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
எரிந்து கொண்டிருக்கும் கழிவினுள் அஸ்பெஸ்டோஸ் கூரை சீற்றுக்களும் உள்ளதால் அவை பாரிய சத்தத்துடன் வெடிப்பதும் கட்டுப்படுத்துவதில் தாமதத்தையும் ஏற்படுத்துகின்றது. மேலும், தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூண்று நாட்கள் செல்லுமெனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபையால் முகாமைத்துவம் செய்யப்படும் குறித்த நிலையத்தில் கழிவுகள் தரம்பிரிக்கப்பட்டு, கூட்டுப்பசளை உற்பத்தி செய்யும் நிலையமும் இயங்கி வரும் நிலையில், தீப்பிடிப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் மற்றும் தூசிகள் காற்றில் பரவுவதால் ஏற்படும் சுவாச நோய்கள் காரணமாக பிரதேச மக்கள் இம்முகாமைத்துவத்தால் தங்களின் சுகாதாரத்துக்குக் கேடாக உள்ளதால் கழிவுகளை இவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர்.
சம்பவ இடத்துக்கு மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி. தவராஜா ஆகியோரும் விஜயம் செய்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
3 hours ago