Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 10 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி நகரில் சேரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு, ஒரு வருட காலத்துக்குள் முழுமையாகத் தீர்வு காணப்படுமென, காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
நகர சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற அடுத்த சில மணிநேரங்களிலிருந்தே, அவசரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகளில், திண்மக் கழிவகற்றல் என்பது தனது பதவிக்கால நிகழ்ச்சிநிரலில் முதலாவது இடத்தில் இருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.
"திண்மக் கழிவகற்றலைப் பூச்சிய மட்டத்துக்குக் கொண்டு வந்து முகாமை செய்தல்" எனும் செயற்றிட்ட, கள கற்கைநெறிக்காக, எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கப்பூருக்குச் செல்லவுள்ள நிலையில், திண்மக் கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக காத்தான்குடி நகர சபை முன்னெடுக்கவுள்ள எதிர்காலச் செயற்றிட்டங்கள் கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் "சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுசரணையுடன், சூழல் சுற்றாடல் அமைச்சும் அங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களும் இணைந்து, திண்மக் கழிவகற்றலை முகாமைத்துவம் செய்வதில் வினைத்திறனுடன் செயலாற்றி, உலகுக்கு முன்னுதாரணம் மிக்கதாய்ச் செயற்படுத்திக் காட்டியுள்ளன.
"அந்தச் செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் படிப்பினைகளுடன் நடைமுறைச் சாத்தியமானவற்றை காத்தான்குடி நகர சபைப்பிரிவில் அமுல்படுத்தி, முழு இலங்கைக்கும் முன்மாதிரியான திண்மக் கழிவு முகாமைத்துவத்தைச் செயற்படுத்திக் காட்டுவதற்கும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்." எனக் குறிப்பிட்டார்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago