2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘திண்மக் கழிவு முகாமைத்துவ பிரச்சினைக்கு விரைவில் தீர்வு’

Editorial   / 2017 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலைய தீ அனர்த்தத்துக்கும் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுக்கும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கடந்த 8 நாட்களாக புகைந்து வரும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலைய தீ அனர்த்தத்தால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் மட்டக்களப்பு, கொத்துக்குளத்து முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்னால் 3ஆவது நாளாக செவ்வாய்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் போதே, பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியாழக்கிழமை வருகை தரவுள்ளார். அப்போது நீண்ட நாளாக இருக்கும் இந்த திண்மக்கழிவுப் பிரச்சனைக்குரிய தீர்வை, அவரின் கவனத்துக்கு  கொண்டுவரவுள்ளதுடன், மக்கள் பிரதி நிதிகளையும் உரிய அதிகாரிகளுடன் அவசரமாக விசேட மாவட்ட அபிவருத்தித் குழுக் கூட்டத்தைக் கூடி, இதற்குரிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், இதற்கான கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொத்துக்குளத்து முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம், 4ஆவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடர்ந்ததுடன், திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை அகற்றும் வரை நாம் இங்கிருந்து நகர மாட்டோமென, திருப்பெருந்துறை மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X