J.A. George / 2024 ஏப்ரல் 19 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி, மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி, மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியை நேற்று (18) மாலை வந்தடைந்தது.
இதன்போது, தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி, வடக்கு மற்றும் கிழக்கு எங்கும் பயணித்த நிலையில், அப்பகுதி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் இன்று (19) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில், இவ்வூர்தி பவனி இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார்.
7 minute ago
15 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
31 minute ago
34 minute ago