Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
திராய்மடு கிராமத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் கீழ் நவீன நகரமாக மாற்றியமைக்க விருப்பம் தெரிவித்தாக முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவருமான வினாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
திராய்மடு கிராமத்தில் 2004 சுனாமியால் வீடுகளை இழந்த நாவலடி புதுமுகத்துவாரம் திருச்செந்தூர் உட்பட பல பாதிக்கப் பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப் பட்டுள்ளனர்.பல நூறு ஏக்கர் நிலப்பரப்பினைக்
கொண்ட இக்கிராமத்தில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் மாவட்ட செயலகக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் ஆறு கைத்தொழில் பேட்டைகளும் நிர்மாணிக்கப்பட அமைச்சரவை அனுமதி வழங்கிள்ளது.
எதிர்காலத்தில் இக்கிராமம் நவீன நகரமாக மாற்றியமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளார் என முன்னாள் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago