Freelancer / 2023 நவம்பர் 16 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ. எல்.ஜவ்பர்கான்
சுகாதார அமைச்சின் தாய் சேய் நலன்புரி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு எடுத்து வரப்பட்ட திரிபோசா பக்கட்டுகளை திருடி விற்பனை செய்த மூவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு புகையிரத்தின் பொருட்கள் பெட்டியின் ஊடாக எடுத்துவரப்பட்ட திரிபோசா பக்கட்டுகளில் 750 கிராம் எடை கொண்ட 150 பக்கெட்டுகளை திருடிய நபர்களே இவ்வாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026