Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 26 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் நகரில் உள்ள திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர், உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை வரை சுமார் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், பள்ளியடி வீதி திருமண வீடொன்றில் வெள்ளிக்கிழமை (24) உணவு உண்டவர்களே, தற்போது உடல் உபாதைக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருப்பதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், எவரும் கவலைக்கிடமான நிலையில் சுகவீனமடையவில்லை என்று, பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம். பழீல் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago