Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளார்களின் வசதி கருதி, மட்டக்களப்பு நகரின் பிரதம பொலிஸ் நிலையத்துக்கு அருகில், தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரங்களை இன்று (19) திறந்து வைத்துள்ளது.
மக்கள் வங்கி தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவிப் பொது முகாமையாளர்கள் எம்.டி.எஸ். கிரிசாந்த பெரேரா, ஏ.யு.ஏம். அன்சார், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
24 மணிநேரமும் இயங்கும் இந்நிலையத்தில், தன்னியக்க காசளிப்பு இயந்திரம், பண வைப்பு இயந்திரம் மற்றும் கட்டணக் கொடுப்பனவு இயந்திரம் என 3 பிரிவுகளாக உள்ளன.
குறித்த நிலையத்தின் மூலம் சுய வங்கிச் சேவைகளாக பணம் மீளப்பெறல், கணக்கு மீதி பற்றிய விசாரணை, இரகசிய குறியீடு மாற்றுதல், சிறு அறிக்கைகள் பெறுதல், பண வைப்பு, மின்சார, நீர்க்கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களுக்கான பணக்கொடுப்பனவு, கணக்கு மீதி பற்றிய விசாரணை, மொபைல் ரீலோட்கள், கணக்குகளிடையே பரிமாற்றம், மொபைலில் பணம் அனுப்புதல் போன்ற சேவைகளைப் பெறலாம்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா, கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்தியக்கலாநிதி விவேகாளந்தராஜா, வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago