Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 09 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
கிழக்கு பல்கலைக்கழக சுதேச வைத்திய பராமரிப்பு பீட மாணவர்கள் “மக்களை ஒடுக்கும் ஊழல் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம்” என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பில் நேற்று (08) இரவு தீப்பந்தம் ஏந்தி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுதேச வைத்திய பீட மாணவர்களின் விடுதிக்கு முன்னால் நேற்று மாலை 6 மணிக்கு ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பீட மாணவர்கள், “மாணவர்களின் எதிர்காலத்தை பெறுப்பேற்றுவது யார்? கோட்ட வீட்டுக்கு போ, அராஜக ஆட்சியை நிறுத்து, பாடசாலைகளை உடன் திற” போன்ற அரசுக்கு எதிரான பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட ஊர்வலமாக சென்றனர்.
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதி ஊடாக 4 கிலோ மீற்றர் தூரம் உள்ள மட்டக்களப்பு நகர் பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தை சென்று அங்கு தீப்பந்தம் ஏற்றி கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் இரவு 7.30 மணிவரை ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். (R)
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago