Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, தொப்பிகல, பிரதேசத்திலுள்ள அரசாங்க காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக லொறியொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தேக்குமரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார், நேற்று (27) அதிகாலை 1 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.
இந்த லொறியின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லொறியில் 16 அடி நீளமுள்ள 33 தேக்கு மரக்குற்றிகள் காணப்பட்டனவென, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டிஎம்ஏ. சமரகோன் தெரிவித்தார்.
இந்த லொறியின் இலக்கத்தைத் தேவையான நேரத்தில் மறைத்துக்கொள்ளத்தக்கதாக அசவு இட்டு பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாருக்கு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து, நரகமுல்ல- புளுட்டுமான்ஓடை வீதி காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸார், அவ்வழியே மரக்குற்றிகளை ஏற்றிவந்துகொண்டிருந்த லொறியைக் கைப்பற்றியுள்ளனர்.
லொறியின் சாரதி, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி எஸ். தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, அவர், டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த மரக்குற்றிகள், ஓட்டமாவடியிலுள்ள மர ஆலையொன்றுக்கு ஏற்றிச்செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அண்மைக்காலத்தில் கரடியனாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகள் இவையாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
55 minute ago
59 minute ago
3 hours ago