2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்று ; சந்தேகநபர்கள் இருவர் சரண்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 டிசெம்பர் 06 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, தொப்பிகல அரசாங்கக் காட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்றிச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை, கரடியனாறு பொலிஸார், நேற்று (05) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவ வேளையில் தப்பியோடிய சாரதிகள் இருவரும், பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனரென, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டிஎம்ஏ. சமரகோன் தெரிவித்தார்.

பொதுமக்கள் மூலமாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஈரளக்குளம் காட்டுப் பிரதேசத்தில் மறைந்திருந்த பொலிஸ் குழுவினர்,  இச்சட்டவிரோத மரக்கடத்தலை முறியடித்துள்ளனர்.

இந்த இரண்டு உழவு இயந்திரங்களிலும் முப்பது மரக்குற்றிகள் காணப்பட்டதாகவும் இவைகள், ஓட்டமாவடிப் பகுதியிலுள்ள மரஆலையொன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தின் சாரதிகள், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று (06) ஆஜர்செய்யப்படவுள்ளனரெனவும் கரடியனாறு  பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X