2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேங்காயின் விலை மேலும் அதிகரிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 08 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் தேங்காயின் விலை மேலும் அதிகரித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய், இன்று (08) 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சிறிய தேங்காய்களும் 70, 80 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்துக்குக் தேங்காயின் வருகை குறைவடைந்துள்ள போதிலும், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களையே, சந்தையில் காணக்கூடியதாக இருக்கின்றது.

தேங்காய்கள், வெளி மாவட்டங்களில் வருவது குறைவடைந்துள்ளதாகவும் தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய்கள் விற்பணை செய்யும் கடைகள் சில மூடப்பட்டுக்கிடப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X