Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதுடன், அது தொடர்பான தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்குவதன் மூலம் இயல்பு வாழ்க்கை சீர்குலையால் இருப்பதை உறுதிப்படுத்துமாறு, கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர கோரினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி, பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான உறவினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமான உறவை வலுப்படுத்தி பாதுகாப்புமிக்க கிராமங்களை கட்டியெழுப்பும் வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் கீழ், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களை பலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 35 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 35 சிவில் பாதுகாப்பு குழுக்களையும் பலப்படுத்தி, அவர்களின் செயற்றிறன் மிக்கதாக மாற்றும் வகையிலான நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன்யட்டவர தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இங்கு கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்ததாவது,
“பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும் அச்சமின்றிய சூழ்நிலையில் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு சிவில் பாதுகாப்பு குழுக்கள் சிறப்பானமுறையில் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.
“குறிப்பாக கிராமப்புறங்களில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அங்குள்ள பொதுமக்களும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமுடியும்.
“இனங்களுக்குள் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும். அவ்வாறு நிலமைகள் தோன்றும்போது, அவற்றைத் தெளிவுபடுத்தி, இன ஐக்கியத்தைப் பேணவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
“கிராமங்களுக்குள் வரும் புதியவர்கள் தொடர்பில் கவனத்துடன் செயற்படவேண்டும். அவ்வாறான நபர்களின் செயற்பாடுகளை அவதானித்து, பொலிஸாருக்குத் தகவல்களை வழங்க பொதுமக்கள் முன்வரவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
59 minute ago
1 hours ago
3 hours ago