Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பகர்கான், வ.சக்தி
சுனாமித் தாக்கம் ஏற்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி, அரசாங்கத்தின் அறிவுறுத்தலில், மாவட்டம் தோறும் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின அனுஷ்டிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்று (26) நடைபெற்ற இந்நிகழ்வில், சுனாமியில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் உறவினர்களின் நலன்வேண்டியும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன், பிரார்த்தனை வழிபாடுகளும் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், சுனாமி இடர் ஏற்படக்கூடிய சாத்தியங்கள், முன்னேற்பாடுகள், தாக்கங்களிலிருந்து வெளியேறும் முறைகள் பற்றியும் செயல் முறையிலான விளக்கவுரை நடத்தினார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கு பால்நிலை சமத்துவம், மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றும், மட்டக்களப்பு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், மாவட்டச் செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .