2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

‘தேவையுள்ள இடத்தில் உதவி வழங்கப்பட்டுள்ளது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேவையுள்ள இடத்தில், அந்த மக்களைத் தேடி வந்து உதவி வழங்கப்பட்டுள்ளதால், அதனைத் தாம் மனமுவந்து வரவேற்றுப் பாராட்டுவதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்  மா. உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கரடியன்குளம் கிராமத்தில் இன்று (20) நடைபெற்ற பொதுச் சேவை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், குடிநீருக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்குமான நீர்த் தேவைக்கும் நீண்டகாலமாக தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வந்த கரடியன்குளம் கிராம மக்களுக்கு, தங்கு தடையின்றி நீர் வசதி கிடைக்கக் கூடிய வகையில் 03 பொதுக் கிணறுகள் திருமதி சிவசக்தி சிவனேசனின் நிதி அனுசரணையில்  அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X