2025 மே 05, திங்கட்கிழமை

தே.அ.அ சோதனை தீவிரம்

Princiya Dixci   / 2021 மே 17 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன், எச்.எம்.எம்.பர்ஸான்

தொடர் பயணத்தடை, இன்று (17) அதிகாலை நீக்கப்பட்டு, தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வெளியில் செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேசிய அடையாள அட்டையை சோதனை செய்யும் நடவடிக்கையை பொலிஸார் இன்று (17) மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் பொலிஸார் தேசிய அடையாள அட்டையை சோதனை செய்ததுடன், அதன் இறுதி இலக்கத்துக்கு மாறாக வெளியில் செல்வோரின் அடையாள அட்டை இலக்கங்களையும் சட்ட நடவடிக்கைக்காக பதிவு செய்து வருகின்றனர்.

அத்துடன், இது தொடர்பிலான விழிப்புணர்வு அறிவுறுத்தல்களையும் ஒலி பெருக்கி மூலம் பொலிஸார்  விடுத்து வருகின்றனர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டுள்ளதுடன், மாலை 6 மணியுடன் மூடப்பட்டல் வேண்டும் எனவும் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் இரவு 11 மணியுடன் மூடப்படல் வேண்டுமென காத்தான்குடி நகருக்கான கொவிட் 19 தடுப்பு செயலணி வர்த்தகர்களைக் கேட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X