Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஜூன் 11 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செங்கலடி, கும்புறுவெளியில் மக்களை பாதிக்கும் வகையில் தண்ணீர் போத்தல் தயாரிப்புத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது எனக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை, கும்புறுவெளி பகுதியில் தண்ணீர் போத்தல் தயாரிப்புத் தொழிற்சாலையொன்று, சுற்றுச் சுழலிலுள்ள மக்களின் அனுமதியைப் பெறாமலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அமைக்கப்பட்டு வருவதாக, மக்கள் போராட்டங்களின் மூலமும் எனது கள ஆய்வின் மூலமும் அறிந்துள்ளேன்.
“இவ்விடயமாக பிரதேச அபிவிருத்திக் குழு, மாவட்ட அபிவிருத்திக் குழு போன்றவற்றில் ஆராயப்படாது, செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“தொழிற்பேட்டைகள் ஆரம்பிக்கப்படும் போது, பிரதேச அபிவிருத்திக் குழு ஒன்றுகூடல், மாவட்ட அபிவிருத்திக் குழு ஒன்றுகூடல் போன்றவற்றில் ஆராயப்பட வேண்டும்.
“எனினும், அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி, மக்களைப் பாதிக்கும் வகையில் தொழிற்பேட்டைகள் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.
“இதேவேளை, இத்தொழிற்பேட்டை அமைக்கப்படும் காணி சார்பாகவும் பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விடயமாக ஆராய்வதற்கு அண்மையில் நடத்தப்படவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இதையும் உட்படுத்துமாறு கோருகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மகஜரின் பிரதிகள், செங்கலடி பிரதேச செயலக பிரதேச செயலாளர், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
10 May 2025
10 May 2025