2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘தொழில் வாய்ப்பை தவற விடாதீர்கள்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வை தற்போது அரசாங்கம் நடத்தி வருகின்றது, இந்த வாய்ப்பை கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (18) கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

அந்த வேண்டுகோளில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியான அறிவித்தலுக்கு அமைய, விண்ணப்பித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு, கடந்த 16ஆம் திகதியிலிருந்து மாவட்ட செயலகங்களில் நடைபெற்று வருகின்றது.

“எனவே, இதுவரை தங்களை பதிவு செய்து கொள்ளாத பட்டதாரிகள் தமது மாவட்ட செயலகங்களுக்குச் சென்று தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுள்ளது.

“அதன்படி ஏற்கெனவே பட்டியலில் இடம்பெறாத அரச தொழில்வாய்ப்பையே நம்பியிருக்கும் வேலையற்ற பட்டதாரிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டு, நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி, அரச தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் இந்த விடயத்தில் கவனமெடுக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X