Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 21 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் தோல்வி கண்ட மாணவனும் சரித்திரம் படைப்பான். அதில் ஒரு உதாரணம் நான்தான் என, ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் என். வில்வரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற வறிய மாணவர்களின் கல்விக்கு உதவுவோம், முதியோரை வாழும் போது வாழ்த்துவோம் எனும் நிகழ்வை கோட்டைமுனை விளையாட்டு கழகமும்,வேப்பவெட்டுவான் சமூர்த்தி சங்கங்களும் இணைந்து நடத்தின. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது,
70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் இங்கு கௌரவிக்கப்படும் பொழுது எனது 5ம் ஆண்டு புலமை பரீட்சைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. நானும் உங்களைகப் போல் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறாத மாணவன்தான்.
ஆனால் பிற்காலத்தில் சிறப்பாக கல்வி கற்று இன்று பிரதேச செயலாளர் என்ற பதவி நிலையை அடைந்துள்ளேன்.
இதுபோல நீங்களும் பிற்காலங்களில் சிறந்த பெறுபேற்றை பெற்று முன்னிலைக்கு வரவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
அரசாங்கமே சகல உதவிகளையும் செய்யும் என்று எண்ணாமல், இவ்வாறான கழகங்கள் பின்தங்கிய கிராம மாணவர்களின் கல்விக்கு உதவுவது வறிய பிள்ளைகளின் கல்வித்தரத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும்.
இளையோர் முதல் முதியோர் வரை கௌரவிக்கும் இச்செயற்பாடு யாவரையும் மதிக்கும் ஒரு அம்சமாகவே காணப்படுகின்றது' என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் பி. குணரெட்ணம், கோட்டைமுணை விளையாட்டு கழக தலைவர் பி. சடாட்சரராஜா, கோட்டைமுணை விளையாட்டு கழக செயலாளர் எஸ். செந்தூரன் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ். ஜெயராஜ் உட்பட சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 25 மாணவர்களும், வாழும்போது வாழ்த்துவோம் எனும் அம்சத்தில் 16 முதியோர்களும், புலமையை வெளிப்படுத்திய மாணவர்களும் கற்றுக் கொடுத்த ஆசியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் 15வது மாற்றம் சமுர்த்தி சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago