Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல், பேரின்பராஜா சபேஷ்,யோ.சேயோன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை 6 மணிவரையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 21. 5 அடியும் வாகனேரிக குளத்தின் நீர்மட்டம் 11.3 அடியும் தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம்; 14. 4 அடியும் கித்துள்வௌ குளத்தின் நீர்மட்டம் 6 அடியும் கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 5. 11 அடியும் உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 11.8 அடியும் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 17.8 அடியும் வெலிக்காக்கண்டிக் குளத்தின் நீர்மட்டம் 15 அடியும் வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 9.11 அடியும் உயர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுகாமம் குளம் தற்போது முழுமையாக நிரம்பிக்காணப்படுவதனால் தொடர்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பத்தில், குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்று உறுகாமம் நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் க.அகிலன் தெரிவித்தார்.
அவ்வாறு உறுகாமம் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் சித்தாண்டி வந்தாறுமூலை, குமாரவேலியார் கிராமம், முறகொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தின் புளியடிமடு வீதியில் அமைந்துள்ள பாலமமும் வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவெட்டுவான் பிரசேத்துக்குச் செல்லும் வீதியும் திங்கட்கிழமை (26) உடைந்து முற்றாக சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (26) காலை 8.30 மணிமுதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரையில் மட்டக்களப்பு நகரில் 9.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மைலம்பாவெளியில் 66.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பாசிக்குடாவில் 155.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை 8 மணி வரையான 48 மணிநேரத்துக்குள் 422 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago