2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தொடரும் மட்டு.பட்டதாரிகளின் போராட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது.

தமக்கு அரச நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நரிலுள்ள காந்திபூங்காவுக்கு முன்னால் நேற்று புதன்கிழமை  காலவரையின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

நேற்று புதன்கிழமை இரவு கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்தரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோர் அங்கு சென்று மத்திய அரசு கட்டளையிட்டால் மட்டுமே மாகாண சபையால் வேலைவாய்பு வழங்க முடியும் என தெரிவித்ததாக பட்டதாரிகள் சங்கத் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.

இரவு வேளையில் பெண் பட்டதாரிகளை வீட்டுக்கு அனுப்பிய பின்பு சுழற்சி முறையில் தங்களுக்கு வேலை கிடைக்கும்வரை உண்ணவிரதப்  போராட்டம்  தொடரும் என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X