Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தொடர்பில், கிராமிய மட்டத்தில் பாரிய விழிப்புணர்வுகளை முன்னெடுக்கும் போதுதான், எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லமுடியுமென, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்தார்.
துறைநீலாவணையில் நேற்று (10) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்காளிக்கட்சியாக இருக்கின்றதே தவிர, அதற்கென்று ஒரு கட்டமைப்போ நிர்வாக ஒழுங்கமைப்போ இல்லை.
“அத்தோடு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்களிக் கட்சிகளாக இருப்பதால் பதிவுசெய்யப்பட்டு, கிராமிய மட்டங்களில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படவேண்டும். இவ்வாறு செயற்படாமல் இருக்குமானால், எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை, த.தே.கூ சந்திக்க நேரிடும்.
“கட்சி என்பதற்கு அப்பால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 04 தமிழ்ப் பிரதிநிதிகளும் நிர்வாக ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுகின்றபோதுதான், மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லிணக்கத்துடன், முழுமையான அபிவிருத்திகளைச் செய்ய முடியும்.
“தமிழ் மக்களின் உரிமை என்ற விடயத்தில் முதன்மைப்படுத்தியதாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இருந்துவந்தமையால், அபிவிருத்தி விடயத்தில், தமிழ்ப் பகுதிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. இதனால் எமது பகுதிகளில் உரிமையுடன் கூடிய அபிவிருத்திகளை முன்னெடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
53 minute ago
1 hours ago