2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

சர்வதேச தென்னை தினம் - 2016ஐ முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை  நடும் திட்டம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் தென்னை பயிர்ச் செய்கை சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தென்னை உற்பத்தியாளர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் உரமானியமும்  இன்று வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயல கேட்போர் கூடத்தில் வைத்து  தென்னங்கன்று வளர்ப்பாளர்கள் 250 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டதுடன்,  25 பேருக்கு தென்னை உரமானியமாக காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X