Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 68 இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சியுடன்;, தொழில் உபகரணங்களும் கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் வைத்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இதன்போது, மோட்டார் சைக்கிள் திருத்துநர் என்.வி.கியூ. மட்டம் 3 பயிற்சியை முடித்துக்கொண்ட 44 பயிலுநர்களுக்கு சான்றிதழ்களும் மேலும், தலா 7,000 ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், கனிம அளவையியல் பயிற்சிநெறியை முடித்துக்கொண்ட 24 இளைஞர்கள் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் பொருளாதார வலுவூட்டல் நிழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து தொழிற் பயிற்சியளிக்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதார மறுசீரமைப்பில் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள அலுவலகம் பல திட்டங்களை அமுலாக்கிவருவதாக அதன் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.சி. பைஷர் கான் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு, வாழ்வாதாரம், தொழிற் பயிற்சி, கல்வி, சுகாதாரம், நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அர்ப்பணித்து வருகின்றது. இதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம். இன்னும் நாம் பல்வேறு திட்டங்களை இயற்கை இடர்களாலும் யுத்தம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளாலும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு உதவ நாம் தயாராக இருக்கின்றோம்' என்றார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago