2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நகரசபையின் அறிவுறுத்தலை மீறிய வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நகரசபையின் அறிவுறுத்தலை மீறி, வர்த்;தக நிலையங்களை திறந்த ஒரு சில வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக, காத்தான்குடி நகரசபை, சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்த வர்த்தக நிலையங்களுக்;கு காத்தான்குடி நகர சபையால் பூட்டு போடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்று (16) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருள்கள், மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்;களைத் திறக்கக் கூடாது என்று,  காத்தான்குடி நகர சபை அறிவித்திருந்தது.

எனினும் அந்த அறிவித்தலையும் மீறி ஒரு சில வர்த்தக நிலையங்களைத் திறந்தவர்களுக்கு எதிராக காத்தான்குடி நகர சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் குறித்த வர்த்த நிலையங்களுக்கு நகர சபையால் பூட்டுப் போடப்பட்டன.

காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X