Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியினை விரைவில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிவிக்கும் நகர சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் , இராஜினாமா தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் ஆலோசனை பெற்றதாகவும் . அதற்கான உத்தரவினை அவர் வழங்கும் பொருட்டு நான் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியினை இராஜினாமாச் செய்வேன்எனவும் நகர சபை உறுப்பினர் முபீன் தெரிவித்தார்
முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட மற்றுமொருவருக்கு சுழற்சிமுறையில் சந்தரப்பத்தினை வழங்கும் பொருட்டு விரைவில் பதவி விலகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்த இவர், முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .