2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நடமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
பாலியல் தொழில் நிமித்தம் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைசெய்யப்பட்ட பெண் ஒருவரை  எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவு விட்டுள்ளார்.
 
புசல்லாவையைச் சேர்ந்த பெண்ணே பொலிஸாரினால் கைதுசெய்யபட்டவராவார்.
 
குறித்த வழக்கு நேற்று (21) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மாலிக்காகந்த நீதிமன்றில் குறித்த பெண்ணுக்கு பாலியல் தொழிலில்; ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்கு இருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இவருக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
வவுணதீவுப் பொலிஸார் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மட்டக்களப்பு நகர பகுதியில் வைத்து குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யதிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X