Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடிக்கான இளைஞர் அணி அமைப்பாளரும் சமூக சேவையாளருமான இல்மி அகமட் லெவ்வை, நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியில் நேற்றிரவு (06) இணைந்து கொண்டார்.
இவர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் இணைந்து கொள்கின்ற வைபவம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், தேசிய அமைப்பாளர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இல்மி அகமட் லெவை உத்தியோக பூர்வமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு, அதில் இணைந்து கொண்டார்.
இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிக் கட்சிகள் முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் அபிலசைகளை நிறைவேற்றத் தவறி விட்டன.
“முஸ்லிம்களின் விடிவுக்காக உழைப்பதிலிருந்து விலகி விட்டன. அந்த வகையில் முஸ்லிம்களின் எதிர்கால நிலைமை குறித்து பேசுகின்ற அது பற்றி சிந்திக்கின்ற ஒரு தனித்துவமான கட்சியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி திகழ்வதால் அதனுடைய கொள்கையும் செயற்பாடும் சிறப்பாக இருப்பதால் நான் இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் இணைந்து கொண்டேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
5 hours ago