Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன், Online ஊடான கற்பித்தலை, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையானது மேற்கொள்ளவுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இது தொடர்பாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாக மாநகர மேயருக்குத் தெளிவுறுத்தும் வகையிலும், குறித்த கற்பித்தல் முறைமைகள் தொடர்பில், பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளில் மாநகர சபையின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலுமாக ஒழுங்கு செய்யப்பட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாநகர மேயர் தலைமையில் நேற்று (24) நடைபெற்றது.
இதன்படி, மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில், கல்வி செயற்பாடுகளை தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முன்னெடுப்பதற்காக கல்வி திணைக்களத்தினால் நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன், Online ஊடான கற்பித்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை மேலும் வினைத்திரனுடனும், சகல வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கம் வகையிலும் விசேடமாக இந்த வருடம் 2020 இல் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும், கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர, உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வி அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் Online Exam, சமூக ஊடகங்கள் ஊடாக வீடியோ கற்பித்தல் செயற்பாடுகள், Whatsapp குழுக்களூடாக அலகு ரீதியான செயலட்டைகள் பரீட்சை வினாத்தாள்கள் போன்றவற்றை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
05 May 2025