2025 மே 19, திங்கட்கிழமை

‘நாட்டின் வளர்ச்சிக்காகப் பங்களிப்போம்’

Editorial   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், துஷாரா

“எமது தாய் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க திடசங்கல்ப்பம் கொள்ள வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு, வெபர் விளையாட்டு மைதானத்தில், நேற்று நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எமது தேசபிதாக்களின் தியாகத்துக்கும் முன்னோடிகளின் முயற்சிகளுக்கும், நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரத்துக்கும் நாம் பெருமை சேர்க்கும் வகையில், நாம் அனைவரும் ஒரே தேசம் என்ற எண்ணக்கருவுடன், ஒரே கொடியின் கீழ், எம்மைச் சூழ்ந்துள்ள எல்லாத் தடைகளையும் உடைத்தெறிய வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X