Editorial / 2019 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு - நாவற்குடா வீதியில், இன்று (11) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹஜ் பெருநாள் விற்பனைக்காகக் கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லொறியும் மணல் ஏற்றிக்கொண்ட சென்ற கனரக வாகனமும், ஒன்றின் பின் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த இருவரே பலியாகியுள்ளனர்.
மணல் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற கனரக வாகனத்தின் டயர் வெடித்ததன் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் லொறியின் சாரதியான ஏறாவூர் 1ஐச் சேர்ந்த மதுர்தீன் எல்ட் ஹசன், லெப்பை தாவுத் அப்துல் முனாப் (வயது 28) ஆகிய இருவரே பலியாகியுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .