Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வருடத்துக்கான பொங்கல் விழா, அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில், நாளை மறுதினம் (23) நடைபெறவுள்ளது.
இது தொடர்பான ஏற்பாட்டுக் கூட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் இன்று (21) நடைபெற்றது.
இதில், நாவிதன்வெளி உதவிப்பிரதேச செயலாளர் என்நவனீதராஜா, கலாசார உத்தியொகத்தர் ஏ.பிரபாகரன், ஆலயங்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது, விழா நிடைபெறும் பிரதேசம், நிகழ்வுகள் உள்ளிட்ட மாகாண பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
தமிழர்களின் கலை பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறவுள்ள மாகாண பொங்கல் விழாவில், பண்பாட்டு ஊர்வலம், மாட்டுவண்டிச் சவாரி, நெல் அறுவடை, பாரம்பரியப் பொருள்களின் கண்காட்சி, பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
45 minute ago
1 hours ago