Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, காத்தான்குடியில் இடம்பெற்று வந்த புனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளை, தற்காலிக இடைநிறுத்தமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி – 5, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் என்பன இதனை அறிவித்துள்ளன.
இதற்கமைய, காத்தான்குடி - 5 பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்ப,ல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல், ப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ், பாலமுனை ஸூபி மன்ஸில் தைக்கா ஆகிய ஸ்தாபனங்களில் நடைபெற்று வருகின்ற புனித றபீஉனில் அவ்வல் மஜ்லிஸ் நிகழ்வுகளும், நாளை (29) நடைபெறவிருந்த கந்தூரி நிகழ்வுகளும், காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில், நாளை மறுதினம் (30) நடைபெறவிருந்த புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
52 minute ago