Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
பாரிய நோயால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நிதி திரட்டும் வேலைகளில் பலர் இறங்கியுள்ளதாக, அப்பிரதேச பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் இவ்வாறு வெளிப் பிரதேசங்களிலிருந்து எவ்விதமான ஆவணங்களும் ஆதாரங்களுமின்றி பெருந்தொகையான பணத்தொகையைச் சேகரித்துச் செல்வதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சிலர் பொய்யான நிதி சேகரிப்பில் ஈடுபடுவதால் உண்மையாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சங்கடத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago