Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 பெப்ரவரி 04 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
சுதந்திர தினத்தை எதிர்த்து மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரிநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள இன்னால் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் அமைப்பாளர் சமூக செயற்பாட்டளாகள் 17 பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
சனிக்கிழமை (03) பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை பொலிஸார் இரவோடு இரவா உரியவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கியுள்ளனர்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினமான பெப்பிரவரி (04) நாடு பூராகவும் கொண்டாடும் நிலையில் வடக்கு கிழக்கில் அதனை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு வலிந்து காணாமல் போன உறவுகளின் சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்தன.
இந்த நிலையில் மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற இருந்துள்ள நிலையில் மட்டு. வெபர் மைதானத்தில் சுதந்திர தின விழா இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் கரிநாள் ஆர்ப்பாட்ட பேரணிக்கு முன்னின்று செயற்படும் இன்னால் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் மற்றும் சமூகசெயற்பாட்டளர்கள் 17 பேருக்கு எதிராக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரியதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு கட்டளை ஒன்றை பிறப்பித்தது.
இந்த தடை உத்தரவை பெற்ற பொலிஸார் குறித்த 17 பேரின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று நித்திரையில் இருந்தவர்களை தட்டியெழுப்பி தடை உத்தரவை வழங்கியுள்ளனர்.
34 minute ago
35 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
35 minute ago
45 minute ago
1 hours ago