Editorial / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் உடுவர நீலபோவில பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பதுலு ஓயாவில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்லயிலிருந்து பசறை நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி உயரமான குன்றின் மீது விழுந்து பதுலு ஓயாவில் கவிழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வாகனம் நீரில் மிதந்து கொண்டிருந்த போது, உரிமையாளர் காரில் இருந்து இறங்கி பதுலு ஓயா வெள்ளத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். தற்போது பெய்து வரும் கடும் மழையினால் பதுலு ஓயாவின் நீர் மட்டம் இந்த நாட்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
27 minute ago
36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago
36 minute ago
44 minute ago