2025 மே 08, வியாழக்கிழமை

நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமருக்கும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கும் இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதத்திலேயே, மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி உணவு, உலர் பொருள்கள் உட்பட அடிப்படைத் தேவைகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X