Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 நவம்பர் 16 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் கிழக்கு மாகாணத்துக்கான 5ஆவது விசேட வழிகாட்டல் குழு மாநாடு, மட்டக்களப்பில் இன்று (16) நடைபெற்றது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ.வணசிங்க தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
கமத்தொழில் அமைச்சின் செயற்படுத்தப்படுகின்ற காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் ராஜ கருணா பங்கேற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதிகலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் உள்ளிட்ட கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன திணைக்களங்கள் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
கமத்தொழில் அமைச்சின் ஊடாக உலக வங்கியின் கடன் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் குறித்த கலந்துரையாடலின் போது, நீர்ப்பாசன குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் புனரமைப்பது தொடர்பாகவும், அதன் ஊடாக விவசாயிகளுக்கு பாரியளவில் நன்மைகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் விசேடமாக ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago