Editorial / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,467 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள் உதவி பணிப்பார் எம்.ஜெகந்நாதன் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 846 விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்த்தில் வவுணதீவு, வாகரை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகமான நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
மாவட்டத்திலுள்ள 18 பெரும்பாக உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வயல் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. தொடர்ந்து வேளாண்மை செய்கைக்குள் அதிகளவிலான நீர் தேங்கியுள்ளது. இதனால் பயிர்கள் அழுகிவருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago