ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயித்தியமலை, பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர், கிராம வீடொன்றிலிருந்து சிறுமியொருவரின் சடலம் இன்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லூர், பாடசாலை வீதியைச் சேர்ந்த, மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் தரம் -09 இல் கல்வி கற்கும் சிவலிங்கம் திஷாந்தினி (வயது 16) என்ற பாடசாலை மாணவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேற்படி சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago