2025 மே 07, புதன்கிழமை

நீதிமன்ற கட்டடத் தொகுதி திறந்துவைப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி மற்றும் நவீன வசதிகள் கொண்ட கேட்போர் கூடம் என்பன வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் வி.வினோபா இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி விஸ்வலிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ரத்ன மாரசிங்க,மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.மனாப்,மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா,களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.றியாழ்,வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், சிறப்பு அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மதுவரித்திணைக்கள அத்தியட்சர்,சிறைச்சாலை அத்தியட்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X