2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நீரில் மூழ்கிச் சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, கிண்ணையடி வாவியில் சனிக்கிழமை (03) மாலை தோணி செலுத்தி விளையாடிக்கொண்டிருந்தபோது, சறுக்கி வாவியில் விழுந்த தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலத்தில் 08ஆம் ஆண்டில் கற்கும் தயானந்தன் நிரோஜன் (வயது 13) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் விநாயகமூர்த்தி கிஷாந்தன் (வயது 15) என்ற சிறுவன் காப்பாற்றப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X