Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்,எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் வியாழக்கிழமை(29) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுக்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு கோரியும் மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் கற்றுவரும் மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.
பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கு,உரிமை கோரும் மாணவர்களை தண்டிக்காதே எனும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது,மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்பாக இருந்து மாணவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலத்தினை நடத்தியதுடன் ஊவலத்தினை தொடர்ந்து நிறுவனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் சதாசிவம் வியாளேந்திரன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தாங்கள் பொது நிருவாக அமைச்சின் கவனத்துக்கும் உயர்கல்வி அமைச்சின் கவனத்துக்கும் கொண்டுவருவதாக குறிப்பிட்டனர்.
மேலும், இவ் விடயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை,மேற்படி தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் பக்கச்சார்பற்ற விசாரணை நாடத்தக் கோரியும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களால் நேற்று திங்கட்கிழமை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வந்தாறுமூலையில்:
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago