2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை

Freelancer   / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டதுடன், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..

குறித்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், இதன்மூலம் ஈட்டிய 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள கலைமகள் பாடசாலை வீதிக்கு அருகில் இருந்த இந்த வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.

இதன்போது நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதான பெண் வியாபாரியே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை இன்றைய தினம் (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .