Princiya Dixci / 2020 நவம்பர் 18 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்
சோளத்தை அழிக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முகமாக விவசாயத் திணைக்களம் விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடமாடும் சேவை, வாகரை பிரதேசத்தில் இன்று (18) நடைபெற்றது.
சோளத்தை பிரதானமாக பாதிக்கும் படைப்புழு மேலும் 100 வகையான பயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டதால் அதில் இருந்து உப உணவு பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் தயாராக வேண்டுமென ஒலி பெருக்கி மூலம் விழ்ப்புணர்வு தகவல் வழங்கப்பட்டது.
வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், சுவரொட்டி மூலமும் விளம்பரப்படுத்தப்பட்டது. அத்துடன், படைப்புழு தாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாக்கத்தில் இருந்து பாதுகாக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
வாகரை பிரதேசத்தில் கல்லரிப்பு, கதிரவெளி, குகநேசபுரம் போன்ற விவசாய கிராமங்களில் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, வடக்கு விவசாய உதவி விவசாயப் பணிப்பாளர் சி.சித்திரவேல், விவசாய போதனாசிரியர்களான இ.பிரபாகரன், ஜீ.விஜிதரன் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago