Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
வ.துசாந்தன் / 2017 ஜூலை 29 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
40 வயது வரையான பட்டதாரிகளை மட்டுமே, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.
இதனால் 70க்கு மேற்பட்ட 45 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகள் பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது,
“வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால், விரைவில் போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு, நியமனம் வழங்கப்படவிருக்கின்றது.
“இதற்காக 40 வயது வரையான பட்டதாரிகளை மட்டுமே நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச்சேவை ஆணைக்குழு, கல்வி அமைச்சுக்கு ஆளுநர் அறிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
“இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள 40 க்கும் 45வயதுக்கும் இடைப்பட்ட 70க்கு மேற்பட்ட பட்டதாரிகள் பாதிப்பை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.
“கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளும் அரச நியமன எல்லையை 45ஆக உயர்த்த வேண்டுமெனவும் கோரிக்கை விட்டிருந்தனர். அவர்களது கோரிக்கையும் நியாயமானது. அதற்கேற்ற வகையில் 45 வயது வரை வயதெல்லையை அதிகரித்து ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“இது தொடர்பில் கிழக்கு முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் விரைந்து செயற்படவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
9 hours ago
9 hours ago
24 May 2025