Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 ஜனவரி 10 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
அமைச்சரவைத் தீர்மானத்தின் படி, நாடு முழுவதிலும் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் 2,590க்கு, செவ்வாய்க்கிழமை (12) அலரிமாளிகையில் வைத்து, பட்டதாரிகள் பயிலுனர் நியமனக் கடிதம் வழங்கப்படும் என்று பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் எஸ்.ஆர்.முஹம்மத் அறிவித்துள்ளார்.
இந்த பட்டதாரிகள் பயிலுனர் நியமனக் கடிதங்கள் அனைத்தும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கிவைக்கப்படவுள்ளன.
வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியில் இணைத்துக் கொள்வதற்கு பயிலுனர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது தொடர்பான கடிதங்கள், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு சனிக்கிழமை (09) கிடைக்கப்பெற்றது.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்குதல் தொடர்பாக, கடந்த வருடம் ஜூலை மாதம் 09ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (12) காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
பல்வேறு காரணங்களால், ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த நியமனக்கடிதங்களைப் பெறத் தவறிய வேலையில்லா பட்டதாரிகள், மீண்டும் விண்ணப்பித்ததன் மூலம், கடந்த வருடம் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நேர்முகப்பரீட்டைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றி, அதிலிருந்து கிடைக்கப்பெற்ற தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2,590 பேருக்கே, தற்போது பயிலுனர் நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த நியமனத்துக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தொழிலற்ற 242 பட்டதாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் ஆர். தீபாகரன் தெரிவித்தார்.
இது சம்பந்தமான மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் 0112673 560 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago