2025 மே 21, புதன்கிழமை

பதற்றத்துக்குத் தீர்வு: ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கடிதம்

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2017 நவம்பர் 01 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, வாழைச்சேனை சந்தியில் முச்சக்கர வண்டிகள் நிறுத்துவது தொடர்பாக இரு சமூகங்களுக்கிடையேயான பதற்றத்தைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக, தங்கெளுக்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துமாறு, கோறளைப்பற்று  பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், கோறளைப்பற்று மத்தி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தினருக்கு அறிவித்துள்ளார்.

 

கோறளைப்பற்று, வாழைச்சேனை ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், கோறளைப்பற்று மத்தி முச்சக்கர வண்டிகள் சங்கத்தினருக்கு நேற்று (31) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே, மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“27.10.2017 அன்று நடைபெற்ற கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம், வாழைச்சேனை பொலிஸ் சுற்று வட்டத்திலிருந்து மட்டக்களப்பு  பிரதான வீதி கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுக்குள் வரும் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை, கறுவாக்கேணி முச்சக்கர வண்டி சாரதிகள் பயன்படுவதற்குக் கையளிக்குமாறு, இப்பிரதேச சபை பணிக்கப்பட்டுள்ளது.

“இதற்கமைவாக, சுற்று வட்டத்திலிருந்து மட்டக்களப்பு வீதியோரமாக தங்களால் நிறுத்தி வைக்கப்படும் முச்சக்கர வண்டிகளை, பொலிஸ் நிலையச் சுற்று வட்டத்திலிருந்து, பொலன்னறுவை வீதி மற்றும் வாழைச்சேனை வீதியில் தங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள தரிப்பிடங்களுக்கு உடனடியாக இடமாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

“இத்தரிப்பிடம் தொடர்பில் பொது அமைதியை ஏற்படுத்துவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலாளர், மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் இக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X