Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பதுறியா வித்தியாலயம், இன்று (30) மீள திறக்கப்பட்டதாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி, பதுறியா வித்தியாலயம் கடந்த வியாழக்கிழமை (26) மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணொருவரின் உறவுமுறையான மாணவியொருவர் பாடசாலைக்கு அன்றைய தினம் சமூகமளித்ததால் அச்சம் காரணமாக பாடசாலை மூடப்பட்டது.
பின்னர், மறுநாள் வெள்ளிக்கிழமை மேற்படி மாணவிக்கு பிசிஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா வைரஸ் தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாடசாலையில் தொற்று நீக்கம் செய்ததன் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டதாக காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago