2025 மே 05, திங்கட்கிழமை

பயணக்கட்டுப்பாடு; வீடுகளில் மதுபானங்கள் பதுக்கல்

Princiya Dixci   / 2021 மே 19 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், அக்காலப்பகுதியில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்கென 3 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு மதுபான போத்தல்கள், மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தெரிவித்தார்.

குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர், மாமாங்கம், கூழாவடி மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, 180 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 307 சாராய போத்தல்களும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவுள்ள 8 சாராய போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X